முயல் வேட்டையாட முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அய்யலூர் வனப்பகுதியில் முயல் வேட்டையாட முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-01-22 18:45 GMT

திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு உத்தரவின் பேரில் அய்யலூர் வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் ஆண்டி, சவேரியார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு அய்யலூர் சங்கிலி கரடு வனப்பகுதியில் வேட்டை தடுப்பு ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் தலையில் டார்ச் லைட் கட்டியவாறு சுற்றித்திரிந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனைத்தொடர்ந்து அவரை பிடித்து அய்யலூர் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் அய்யலூர் வனச்சரக அலுவலர் குமரேசன் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர், எத்தலப்பநாயக்கனூரை சேர்ந்த பெருமாள் (வயது 34) என்பதும், முயல் வேட்டையாட வனப்பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. அவருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வன உயிரினங்களை வேட்டையாடுவது உறுதி செய்யப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறி, அவரை எச்சரித்து அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்