வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-11 19:45 GMT

நாகர்கோவில்,


சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வங்கி

குளச்சல் குளவிளை பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து குளச்சல் பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றார். அப்போது ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து கொண்டார்.

பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீது மற்றும் இன்சூரன்ஸ் பாலிசியையும் வங்கி நிர்வாகம் வழங்கவில்லை. இதுபற்றி நெல்சன் சம்பந்தப்பட்ட வங்கியிடம் கேட்டும் சரியான பதில் அளிக்கவில்லை. பின்னர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித தகவலும் இல்லை.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இதனால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் நெல்சன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி நெல்சனுக்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க வேண்டும் அல்லது அவர் செலுத்திய தொகை ரூ.34 ஆயிரத்தை வங்கி உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்