முதிர்வு தொகைக்கு வட்டி கொடுக்கவில்லை:வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
முதிர்வு தொகைக்கு வட்டி கொடுக்காத வங்கிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வதிக்கப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலை சேர்ந்தவர் கால்வின் ஜோசப். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கணக்கு வந்திருந்தார். அந்த கணக்கில் உள்ள பணம் முதிர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகை மற்றொரு கணக்குக்கு அனுப்பும்படி கூறினார். ஆனால் வங்கியானது முதிர்வடைந்த தொகையை மட்டும் செலுத்தி விட்டு அதற்கான வட்டித் தொகையை கொடுக்கவில்லை. எனவே வட்டி பணத்தை தரும்படி வங்கியை அணுகினார். எனினும் கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான கால்வின் ஜோசப் நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். அந்த தொகையை கால்வின் ஜோசப்புக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும், அதோடு வட்டி தொகை ரூ.24 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.