புகையிலை விற்ற கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

நெல்லை அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-08-24 20:00 GMT

நெல்லை அருகே உள்ள தென்கலம், பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அலி அக்பர் (வயது 65) என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று இந்த கடையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரநாராயணன், தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார், தாழையூத்து தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் சோதனை செய்தபோது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. ஆகவே புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரின் கடைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கர நாராயணன் தற்காலிகமாக 'சீல்' வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்