திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு ரூ.5½ லட்சம் அபராதம்

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் விதிமுறைகளை மீறிய 45 வாகனங்களுக்கு ரூ.5½ லட்சம் அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-06-05 11:36 GMT

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிக பாரம் ஏற்றப்பட்டு சரக்கு வாகனங்கள் இயக்குவது தொடர்பாக சோதனை செய்ய சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் திருவள்ளூர் வட்டார போக்குவத்து அலுவலர் மோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 45 சரக்கு லாரிகளை ஆய்வு செய்து அதில் அதிக சுமை, அனுமதிக்கு புறம்பாக சரக்கு ஏற்றும் பகுதியை உருமாற்றம் செய்தல், தகுதிச்சான்று மற்றும் சாலைவரி செலுத்தாத சரக்கு டிப்பர் லாரிகள் 3 வாகனங்களை சிறை பிடித்தும், 6 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கியும், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இதன் மூலமாக ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் அபராதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்