பிளாஸ்டிக் பை பயன்படுத்திய தக்காளி வியாபாரிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
பிளாஸ்டிக் பை பயன்படுத்திய தக்காளி வியாபாரிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.;
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வரும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் நேற்று ராமன்புதூர் சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வியாபாரம் செய்வதற்காக ஆட்டோவில் தக்காளி கொண்டு வரப்பட்டது. அந்த ஆட்டோவை தடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தக்காளி வியாபாரியிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த வியாபாரிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர் பயன்பாட்டுக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.