சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்குமா? பியர்சோலா அருவி

கொடைக்கானலில் பியர்சோலா அருவிக்கு சுற்றுலா பயணிகளை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.;

Update:2022-07-21 20:58 IST

கொடைக்கானல் நகரின் மையப்பகுதியில் பியர்சோலா அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில்கொஞ்சும் இந்த அருவி, சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கும் இடம் ஆகும். வருடத்தின் 8 மாதங்கள் வரை இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கடந்த சில தினங்களாக, கொடைக்கான‌ல் பகுதியில் பெய்து வரும் மழையினால் அருவில் தண்ணீர் கொட்டுகிறது.

இந்தநிலையில் அருவி அருகே காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த சில ஆண்டுகளாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே பியர்சோலா அருவியை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பியர்சோலா சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைக்குமா? என்பது வனத்துறையினரின் கையில் தான் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்