மகனை அரிவாளால் வெட்டிய தந்தை

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மகனை அரிவாளால் தந்தை வெட்டினார்.

Update: 2023-05-14 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அரியாங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 64). இவருடைய மகன் ஜெயக்கண்ணன்(44). இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசு, மகன் ஜெயக்கண்ணனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த ஜெயக்கண்ணன் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருநாவுக்கரசை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்