நெல்லை: பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியான சோகம்..!

நெல்லை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் பலியாகினர்.

Update: 2022-07-26 10:44 GMT

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்தமுத்துசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 55). இவரது மகள் ஜான்சி (24). இவருக்கு திருமணமாகி பெண்குழந்தை உள்ளது. ஜான்சி வள்ளியூரில் உள்ள தனியார் டெய்லரிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இன்று காலை அவர் வேலைக்கு புறப்பட்டபோது அவரது தந்தை ஐயப்பன் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விடுவதாக கூறியுள்ளார். அதன்படி இருவரும் புறப்பட்டு சென்றனர்.

பணகுடி முத்துசாமிபுரம் போக்குவரத்து தடுப்பை கடந்து சென்ற போது அவ்வழியாக வள்ளியூரில் இருந்து நாகர்கோவிலுக்கு தெற்கு நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜான்சி சம்பவ இடத்திலும், ஐயப்பன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பணகுடி போலீசார் கார் டிரைவர் வள்ளியூரை சேர்ந்த மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்