அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சாவு
திருவெண்ணெய்நல்லூரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சாவு
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் மணி(வயது 55). விவசாயியான இவர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் சாகுபடி செய்து வந்தார். இந்த நிலையில் மணி நேற்று மதியம் 3.30 மணியளவில் வயலில் தேங்கி நின்ற மழை நீரை வெளியே திறந்து விடுவதற்காக சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வழியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மணி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.