தமிழக நிதி அமைச்சர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு

தமிழக நிதி அமைச்சர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-08 18:04 GMT

புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தகவல் தொழில்நுட்ப அணியில் மண்டல அமைப்பாளராக உள்ளார். இவரது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயரில் ஒருவர் பாலோ அப் செய்துள்ளார். இந்த நிலையில் செந்தில்குமாரை தொடர்பு கொண்ட அந்த நபர், இன்ஸ்டாகிராம் மெசேஜில் நலம் விசாரித்து விட்டு, கூகுள் பே வைத்துள்ளீர்களா? என கேட்டுவிட்டு, தனது வங்கி கணக்கில் இன்றைய பண லிமிட் முடிந்த நிலையில், ரூ.13,500 எனக்கு அனுப்ப முடியுமா? 2 மணி நேரத்தில் திருப்பி தருகிறேன் என மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனை பார்த்த செந்தில்குமார் அதிர்ச்சியடைந்தார். இதனை அனுப்பியது நிதி அமைச்சர் பெயரில் மர்மநபர் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராமில் உள்ள அந்த போலி கணக்கு முகவரியை தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பெயரில், அவரது புகைப்படத்தை பயன்படுத்தி மர்மநபர் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்