குடிபோதையில் இருந்த தனியார் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளை

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-11 12:30 GMT

கோவை:

கடலூர் காட்டுமன்னார் கோயிலை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவர் சில ஆண்டுகளாக கோவை செட்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அவர் தனது சொந்த ஊரான கடலூர் செல்வதற்காக கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவர் தான் சேமித்த வைத்திருந்த சம்பள பணம் ரூ.1 லட்சத்தை தனது பேக்கில் வைத்திருந்தார். இந்நிலையில், குடிப்பழக்கம் உடைய ராஜசேகர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்குள் சென்று மது அருந்தினார். பின்னர் இரவு 12 மணியளவில் குடிபோதையில் வெளியே வந்தார்.

தள்ளாடிய படி வந்த அவரை நோட்டமிட்ட 2 பேர் அவருக்கு பஸ்சில் ஏற்றி விடுவதற்கு உதவி செய்வது போல் நடித்து அவரை அழைத்து சென்றுள்ளனர். மிதமிஞ்சிய போதையில் இருந்த அவருக்கு அந்த நபர்கள் தன்னை எங்கு அழைத்து செல்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதையடுத்து அந்த 2 பேரும் அங்குள்ள தனியார் பள்ளி அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இரும்பு கம்பியால், தாக்கி அவரிடம் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்