நோயால் பாதிக்கப்பட்டவர்கத்தியால் குத்தி தற்கொலை

தூத்துக்குடியில் நோயால் பாதிக்கப்பட்டவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-24 18:45 GMT

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 37). இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாராம். மனநிலையும் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடையின் முன்பு நின்ற இசக்கிமுத்து திடீரென மறைத்து வைத்து இருந்த கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டாராம். இதில் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்