சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர் திடீர் சாவு

சதுரகிரி கோவிலுக்கு சென்ற பக்தர் திடீரென இறந்தார்.;

Update:2023-10-16 01:45 IST

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவர் தனது நண்பர் நாகராஜனுடன் வந்தார். இவர்கள் இரட்டைலிங்கம் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது ரமேசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த ரமேசின் உடலை டோலி மூலமாக தாணிப்பாறை அடிவாரம் கொண்டு வந்து வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்