பிணமாக கிடந்த சுமை தூக்கும் தொழிலாளி

விழுப்புரம் தங்கும் விடுதியில் பிணமாக கிடந்த சுமை தூக்கும் தொழிலாளி

Update: 2022-09-26 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் வைத்தியநாதன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 45). இவர் டாஸ்மாக் குடோனில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. கடந்த 10 மாதங்களாக வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் விழுப்புரம் தென்றல் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே தங்கும் விடுதி ஊழியர்கள், அந்த அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்