அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.;

Update:2023-05-14 23:09 IST

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

மேலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாலும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் என்று சொல்வதற்கு ஏற்ப நேற்று வெயில் வாட்டி வதைத்தது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொது மற்றும் கட்டண வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்