கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்

கல்லணையில் குவிந்த மக்கள் கூட்டம்;

Update:2023-01-30 01:20 IST

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமைமிக்க சுற்றுலாத்தலம் கல்லணை. நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் காலையிலிருந்து கல்லணையில் கூட்டம் அதிகமாக இருந்தது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் மட்டும் இல்லாமல் அண்டை மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிந்ததால் பாலங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம், சிறுவர் பூங்கா ஆகியவற்றிலும் கூட்டம் அலைமோதியது. சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்களில் தங்கள் குழந்தைகளை விளையாடவிட்டு பெற்றோர்கள் உற்சாக குரல் எழுப்பி மகிழ்ந்தனர். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்றுமுன்தினம் மாலை நிறுத்தப்பட்டது. நேற்று காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. சிறிய அளவில் காவிரி ஆற்று பாலங்களில் மதகுகளின் வழியாக வெளிவந்த தண்ணீரில் பாலத்தின் அருகில் சுற்றுலா வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்