கிணற்றில் தவறி விழந்த பசு மாடு உயிருடன் மீட்பு
நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.
நாட்டறம்பள்ளியை அடுத்த சின்ன கண்ணன் வட்டம், பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ், விவசாயி. இவர் தனது பசு மாட்டை வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். அப்போது அங்குள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று இரவு தவறி விழுந்தது. உடனடியாக இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் நிலைய அலுவலர் ஞானஒளிவு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி கிணற்றில் தவறி விழந்த பசு மாட்டை கயிறு கட்டி காயமின்றி உயிருடன் மீட்டனர்.