சேற்றில் சிக்கிய பசுமாடு

பேரளம் அருகே சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

Update: 2022-12-25 18:45 GMT

நன்னிலம்,

பேரளம் அருகே சேற்றில் சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

சேற்றில் சிக்கிய பசுமாடு

பேரளம் அருகே கோனாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உதயபாரதி. இவர் தனது வீட்டில் பசுமாடு ஒன்று வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் குடிக்க இறங்கிய பசுமாடு, சேற்றில் சிக்கியது. இதை பார்த்த உதயபாரதி பசுமாட்டை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து அவர், பேரளம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அரை மணிநேரம் போராடி பசுமாட்டை சேற்றில் இருந்து உயிருடன் மீட்டனர். பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினரை கிராம மக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்