மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு பலி
நெமிலி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பசுமாடு இறந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி சுற்றுவட்டார பகுதிகளான அகவலம், ரெட்டிவலம், கீழ்வீதி, மகேந்திரவாடி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் மகேந்திரவாடி கிராமம், அண்ணா நகரில் வசிக்கும் கஸ்தூரி என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை அவரது வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தபோது உயர்அழுத்த மின்கம்பி அறுந்து கொட்டைகையின் மேல்விழுந்ததில் பசுமாடு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.