பள்ளிபாளையம்
நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்மேடு பகுதியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 21-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் தேவி, புலவர் திருக்குமரன், தமிழ் தேசிய தலைவர் இமயம் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து நன்றி கூறினார்.