கல்லூரி மாணவரின் சாதனை
மாணவர் ஆகாஷ் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நோவா சாதனை பதிவு செய்தார்.
கடலூர் மாவட்டம் திருத்துறையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நோவா சாதனை பதிவுக்காக 1 நிமிடத்தில் 77 முறை சிட்-அப்ஸ் செய்து சாதனை படைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலையில் நடைபெற்ற சாதனை நிகழ்வைத்தொடர்ந்து அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.