கல்லூரி பஸ் மோதி வாலிபர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே கல்லூரி பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-08 16:51 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே சோ.நம்மியந்தல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் மோகன் (வயது 17). அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவா (17).

நண்பர்களான 2 பேரும் பிளஸ்-2 முடித்துள்ளனர்.

சம்பவத்தன்று மோகன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக சிவாவை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார்.

அப்போது திண்டிவனம் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த மோகன், சிவா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக இறந்தார்.

சிவா சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்