ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றுவரும் தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-01 05:00 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது.

இந்தநிலையில் இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருளிய பிறகு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தற்போது தேரோட்டம் நடைபெற்று வருகிற்து. விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்ட நிகழ்வையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

Tags:    

மேலும் செய்திகள்