அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-31 19:07 GMT

தாயில்பட்டி, 

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

தேசிய தரச்சான்றிதழ் வழங்கும் மத்திய ஆய்வு குழுவினர் தாயில்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 2 நாட்கள் ஆய்வு செய்தனர். மத்திய ஆய்வு குழு உறுப்பினர்கள் டாக்டர் அஜய்குமார், டாக்டர் சுவேதா கணிகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் ேபாது சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குனர் கலுசிவலிங்கம், மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை, உதவி மருத்துவர்கள், பகுதி நேர, கிராமப்புற, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

நிதி உதவி

ஆய்வில் புற நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், மகப்பேறு மருத்துவமனை, உள்நோயாளி பிரிவு மருந்தகம், பிரசவ கவனிப்புஅறை, அறுவை சிகிச்சைஅறை, விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை அறை உள்ளிட்ட அறைகளை ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆஸ்பத்திரியை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் அடிப்படையில் வரும் 3 ஆண்டுகளுக்கு தேசிய சுகாதார திட்டத்தில் நிதி உதவி கிடைக்கும்.

இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்கட்டமைப்பு வசதி, மருத்துவ உபகரணங்கள் வாங்க முடியும். இது பொது மக்களுக்கு கூடுதலான மருத்துவ சேவை அளிக்க உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்