பெண் குளித்ததை செல்போனில் படம் எடுத்தவர் மீது வழக்கு
பெண் குளித்ததை செல்போனில் படம் எடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் வசந்த்(வயது 21). இவர் மறைந்திருந்து, ஒரு பெண் குளித்ததை தனது ெசல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து வசந்த் வீட்டில் மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.