சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு

சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-29 17:09 GMT

  கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடைபெறுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்