காத்திருப்பு போராட்டம் நடத்திய 45 பேர் மீது வழக்கு
ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்திய 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆலங்குடி அருகே உள்ள ஆவுடானிக்குளத்தின் பல பகுதிகள் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என செரியலூர் கிராம மக்கள் சார்பில் அன்புச்செல்வன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்தநிலையில், செரியலூர் ஆவுடானிக்குளத்தின் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு செரியலூர், ஜெமீன் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக குமாரவேல், சண்முக நாதன், மாதவன் உள்பட 45 பேர் மீது ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.