பெண்ணை கேலி செய்த விவகாரம்:வாலிபர் மீது தாக்குதல்

பெண்ணை கேலி செய்த விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2023-04-19 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ராஜீவ் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் ஆத்தி குமார் (வயது 23) லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி முத்துக்குமார் என்பவர் கடந்த 17-ந் தேதி அவரது தெருவில் உள்ள ஒரு பெண்ணை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த, ரமேஷ் மற்றும் 2 பேர் நேற்றுமுன்தினம் முத்துக்குமாரை தேடிெசன்றனர். அப்போது ஸ்பிக் நகர் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகே ஆத்திகுமார் வந்து கொண்டிருந்துள்ளார். அவரை முத்துக்குமார் என நினைத்து, 3 பேரும் சேர்ந்து வழிமறித்து ஆத்திகுமாரை கத்தி, விறகு கட்டை, பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த ஆத்தி குமாரை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ரமேஷ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்