இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது வழக்கு

திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-08-05 19:30 GMT

கோவை

திருமணம் ஆனதை மறைத்து இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இளம்பெண்ணுடன் பழக்கம்

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் 22 வயது பட்டதாரி இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த பிரதீப் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அது நாளடைவில் காதலாக மாறியது. அப்போது பிரதீப் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பழகி உள்ளார்.

மேலும் அவர்கள் 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே பிரதீப்புக்கு திருமணம் ஆனது சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது.

இது குறித்து இளம்பெண் கேட்ட போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் அந்த இளம்பெண் பிரதீப்புடன் பேசுவதையும் பழகுவ தையும் தவிர்த்தார். ஆனால் பிரதீப், அந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்து உள் ளார்.

இது குறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார், பிரதீப்பை அழைத்து எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பினர்.

வழக்கு பதிவு

இந்த நிலையில், இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது பிரதீப் அத்துமீறி நுழைந்து காதலிக்குமாறு கூறி மிரட்டி தொல்லை கொடுத்து உள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரதீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்