குளித்தலை கோட்ட பகுதியில் கடந்த ஆண்டு வாகன விதி மீறலில் ஈடுபட்ட 32,406 பேர் மீது வழக்குப்பதிவு

குளித்தலை கோட்ட பகுதியில் கடந்த ஆண்டு வாகன விதி மீறலில் ஈடுபட்ட 32,406 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.92 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-08 18:49 GMT

வாகன சோதனை

கரூர் மாவட்டம் குளித்தலை கோட்ட பகுதியில் குளித்தலை போக்குவரத்து போலீசார் தினசரி வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் தினசரி நடத்தும் வாகன சோதனையில் லாரியில் அதிக பாரம் ஏற்றிவந்தது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, தலைகவசம் அணியாதது.

இன்சூரன்ஸ் இல்லாதது, 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது, சரக்கு வேன்களில் ஆட்களை ஏற்றுவது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

92 லட்சம் அபராதம்

இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு வாகன விதி மீறல்களில் ஈடுபட்ட 32 ஆயிரத்து 406 பேர் மீது வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.92 லட்சத்து 40 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 399 பேர் மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு மட்டும் ரூ.39 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்