கோலம் போட்ட இளம்பெண்ணை வீடியோ எடுத்த வாலிபர் உள்பட 2 பேர் மீது வழக்கு

பண்ருட்டியில் கோலம் போட்ட இளம்பெண்ணை வீடியோ எடுத்த வாலிபர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-16 18:37 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி சங்கீதா (வயது 30). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் (25) என்பவர் கோலம் போட்டுக் கொண்டிருந்த சங்கீதாவை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சங்கீதா, கலைச்செல்வனை தட்டிக் கேட்டுள்ளார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வன் தனது தாய் திலகத்துடன் (45) சேர்ந்து சங்கீதாவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சங்கீதா, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கலைச்செல்வன், திலகம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்