மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம்பெண் மீது வழக்கு
பள்ளிபாளையம் அருகில் மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் அருகில் வண்ணம்பாறையை சேர்ந்தவர் பாவாயி (வயது 70). இவரது கணவர் சண்முகம். கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பூமணி (26). இவர் நேற்று காலை பாவாயி வீட்டுக்கு சென்று எனது கோழியை ஏன் திருடினாய் என்று கேட்டுள்ளார். அதற்கு பாவாயி தான் கோழியை திருடவில்லை எனக் கூறி உள்ளார். பின்னர் பூமணி தகாத வார்த்தையால் திட்டி தான் கையில் வைத்திருந்த உடைந்த பாட்டிலால் பாவாய் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த பாவாயி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து பாவாயி பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் பூமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.