முன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது வழக்கு

முன்விரோதத்தில் பெண் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-09-18 00:18 IST

தோகைமலை அருகே உள்ள தொப்பாநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமாநாயக்கர். அதே பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 33). இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று காமாநாயக்கரின் மனைவி சத்யா (26) தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது, பழனிவேல் மற்றும் அவரது உறவினர் சதீஷ் ஆகியோர் நிலம் தொடர்பான முன்விரோதத்தில் சத்யாவிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியும், தகாதவார்த்தையால் திட்டியும் உள்ளனர். இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் பழனிவேல், சதீஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்