குமரிக்கு 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் வந்தது
திருவாரூரில் இருந்து குமாிக்கு 1000 டன் நெல் சரக்கு ரெயிலில் வந்தது.
நாகர்கோவில்:
திருவாரூரில் இருந்து குமாிக்கு 1000 டன் நெல் சரக்கு ரெயிலில் வந்தது.
குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்க மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்தமாக அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. அதே சமயத்தில் இடையிடையே நெல்லும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழக அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் திருவாரூரில் இருந்து குமரிக்கு சரக்கு ரெயிலில் வேகன்கள் மூலம் 1,000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் உள்ள 3 அரிசி ஆலைகளுக்கு அந்த நெல் மூடைகளை அனுப்பி வைத்தனர். அங்கு நெல், அரிசியாக்கப்பட்ட பிறகு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.