டயர் வெடித்து தடுப்புச்சுவர் மீது ஏறி நின்ற கார்

திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் டயல் வெடித்து தடுப்புச்சுவர் மீது கார் ஏறி நின்றது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-12-14 17:00 GMT

திண்டுக்கல் குடைபாறைபட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 26). இவர், தனது மனைவி நாகஜோதி (25), உறவினர் ரெங்கம்மாள் (70) ஆகியோருடன் காரில் திருச்சியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் நேற்று மதியம் அவர்கள் காரில் திண்டுக்கல்லுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை உதயகுமார் ஓட்டினார்.

திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அய்யலூர் பெருமாள் கோவில்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது ஏறி நின்றது. இதில் நாகஜோதி, ரெங்கம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். உதயகுமாருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்