திம்பம் மலைப் பாதையில் கார்-தனியார் பஸ் நேருக்கு நேர் மோதல்...!
திம்பம் மலைப்பாதையில் கார்-தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
தாளவாடி,
ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 45-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் இன்று காலை திம்பம் மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது, எதிரே கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்து காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்கள் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின்னர் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.