பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் முகாம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையனூர், வேலயாம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, கண்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு,, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், மாநில கைப்பந்து சங்க துணைத்தலைவர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி, திருவண்ணாமலை ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.