தென்காசி-குற்றாலம் சாலையில் முறிந்து தொங்கிய மரக்கிளை

தென்காசி-குற்றாலம் சாலையில் முறிந்து தொங்கிய மரக்கிளையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-04-12 19:00 GMT

தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் நன்னகரம் பகுதியில் நேற்று மதியம் திடீரென ஒரு புளிய மரத்தின் பெரிய கிளை முறிந்து தொங்கிக் கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, அந்த மரக்கிளையை வெட்டினர். பின்னர் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்