பழுதடைந்து சாலையின் நடுவே நின்ற லாரி
பழுதடைந்து லாரி சாலையின் நடுவே நின்றது.
அரியலூர் புறவழிச்சாலையில் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே நேற்று எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி பழுதடைந்து நின்றது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின்படி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று வாகன போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் பழுதடைந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். துரிதமான நடவடிக்கை மேற்கொண்ட போலீசாரை, வாகன ஓட்டிகள் பாராட்டினர்.