நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி பலி

நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி பலியானான்.

Update: 2022-08-28 16:10 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி அன்பழகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன்கள் சந்துரு (வயது 16). தினேஷ் (14). இவர்கள் தங்கள் நண்பர்களான கவியரசு, மாதேஷ் ஆகியோருடன் அருகில் உள்ள பெரிய ஆண்டவர் கோவில் குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது குட்டையில் நூறு அடி தூரத்தில் இருந்த கல்லை தொட்டு திரும்பி வரவேண்டும் என்று சொல்லி நான்கு பேரும் குட்டையில் குதித்து கல்லை தொட்டு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்துரு முள் செடியில் மாட்டிக் கொண்டான்.

இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் மற்றும் நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக தினேஷ் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தான். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த ராமநாதன் குட்டையில் குதித்து முள் புதரில் சிக்கிய சத்துருவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றார். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது சம்பந்தமாக ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்