கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை

குன்னூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த காட்டெருமை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது.

Update: 2022-09-02 14:59 GMT

குன்னூர், 

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் குன்னூர் அருகே பெரிய வண்டிசோலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக தற்காலிக கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று அப்பகுதிக்கு உணவு தேடி காட்டெருமை ஒன்று வந்தது. பின்னர் காட்டெருமை தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தது. உடனே அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வனத்துறை மற்றும் தீயணைப்புத் ்துறையினருக்கு தகவல் தெரித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் காட்டெருமையை மீட்கும் பணியில் முயற்சியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் உதவியுடன், 4 மணி நேரம் போராடி காட்டெருமையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்