60 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை சாவு

பொன்னமராவதி அருகே 60 அடி கிணற்றில் விழுந்த காட்டெருமை பலியானது. மற்றொரு காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி மீட்கப்பட்டது.;

Update:2023-03-24 01:01 IST

கிணற்றில் விழுந்த காட்டெருமைகள்

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் அருகே செம்மலாபட்டியில் பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள தண்ணீரில்லா கிணற்றில் 2 காட்டெருமைகள் விழுந்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி வனத்துறையினர், கால்நடை துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கால்நடை துறையினர் கிணற்றில் இறங்கி பார்த்தனர். அப்போது ஒரு காட்டெருமை இறந்து கிடந்தது. மற்றொரு காட்டெருமை உயிருடன் இருந்தது.

மயக்க ஊசி செலுத்தி மீட்பு

இதையடுத்து, அந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்திய பிறகு தீயணைப்பு வீரர்கள் சுமார் 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் மற்றும் கிரேன் உதவியுடன் அதனை மீட்டனர். பின்னர் அந்த காட்டெருமைக்கு கால்நடை டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதனைதொடர்ந்து அந்த காட்டெருமை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

இறந்து கிடந்த காட்டெருமையின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பரிசோதனைக்கு பிறகு காட்டெருமை வனப்பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்