வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த கரடி
பந்தலூர் அருகே வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த கரடி அரிசி, பருப்புகளை தின்றது.;
பந்தலூர் அருகே அத்திகுன்னா கே.கே.நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியயேறிய கரடி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அதேப்பகுதியை சேர்ந்த கார்த்தின் என்பவரின் வீட்டின் பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் புகுந்தது. பின்னர் அங்கு இருந்து சமையல் எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று தீர்த்தது. சமையல் அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதால் கார்த்திக் அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் சத்தம் போடவே கரடி அங்கிருந்து வேகமாக வெளியேறி ஓடி புதருக்குள் மறைந்தது. சம்பவம் குறித்து அறிந்ததும் தேவாலா வனச்சரகர் சஞ்சீவி மற்றும் வனத்துறையினர், அங்கு சென்று கரடி சேதப்படுத்திய வீட்டு சமையல் அறையை பார்வையிட்டனர். வீட்டு சமையல் அறைக்குள் கரடி புகுந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.