பொதட்டூர்பேட்டை அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பொதட்டூர்பேட்டை அருகே 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-08-02 14:23 IST

பள்ளிப்பட்டு,

9-ம் வகுப்பு மாணவி

பள்ளிப்பட்டு தாலுக்கா ராமாநாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தாமு (வயது 45). டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி (30). கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இவர்களுக்கு கங்கோத்திரி (14) உள்பட 4 மகள்கள் உள்ளனர்.

கங்கோத்திரி, கீச்சலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வருடம் தாய் இறந்த நாள் முதல் மன உளைச்சளில் இருந்து வந்தாக தெரிகிறது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் மாணவி கங்கோத்திரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் பொதட்டூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்