மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5¾ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

வேப்பந்தட்டை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5¾ பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-17 18:41 GMT

சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 48). இவர் நேற்று தலைவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் பஸ்சில் கோவிந்தம்பாளையம் வரை வந்துள்ளார். அதன் பிறகு தனது உறவினர் வனிதா (40) என்பவர் ஓட்டி வந்த மொபட்டில் பின்னால் அமர்ந்து கொண்டு கை.களத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். பில்லங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கலைச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த இருந்த 5¾ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

வலைவீச்சு

இதில் கலைச்செல்வி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் தாலி சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்