16 வயது சிறுமி தற்கொலை

செம்பட்டி அருகே, 16 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-13 16:56 GMT

செம்பட்டி அருகே உள்ள பழைய செம்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அவருடைய மனைவி நாகேஸ்வரி. இவர்களுக்கு மணிஷா (வயது 16), ரூபன் (7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். மணிஷாவின் பெற்றோர், திருப்பூரில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். பழைய செம்பட்டியில் உள்ள தனது தாத்தா கிருஷ்ணன், பாட்டி லட்சுமி ஆகியோருடன் மணிஷா வசித்து வந்தார். சின்னாளப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த இவர், சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுத்தேர்வும் அவர் எழுதவில்லை.

இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு மணிஷா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மணிஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்