15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.;

Update:2022-12-07 02:19 IST

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருக்கு வெங்கட்நாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் தோட்டம் உள்ளது. நேற்று அங்கு தொழிலாளர்கள் வேலை செய்தபோது, அப்பகுதியில் மலைப்பாம்பு கிடந்ததை கண்டனர். இது பற்றி அவர்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 15 அடி நீள மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்