12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
விக்கிரமசிங்கபுரத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் டானா பகுதியில் கழிவுநீர் ஓடையில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது. இதுகுறித்து பாபநாசம் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வனச்சரக அலுவலர் சக்தியவேல் உத்தரவின்பேரில் வனக்காவலர் முத்துக்குமார் மற்றும் சூழல் காவலர்கள் தினேஷ், ராஜா ஆகியோர் கழிவுநீர் ஓடையில் கிடந்த சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து பாபநாசம் வனப்பகுதியில் விட்டனர்.