கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

கோழியை விழுங்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2022-10-25 18:09 GMT

அன்னவாசல் அருகே காலாடிபட்டி தெற்கிக்களம் பகுதியை சேர்ந்தவர் மணிவேல். இவர் வீட்டில் கோழி, ஆடுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள கோழி கொட்டகைக்குள் புகுந்த மலைப்பாம்பு கோழியை பிடித்துள்ளது, அப்போது மற்ற கோழிகள் தொடர்ந்து கத்தியுள்ளது. இதனைக்கண்ட மணிவேல் அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு கோழியை விழுங்கிவிட்டு நகர முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து மணிவேல் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புகாட்டில் கொண்டு விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்